எங்களது நோக்கம்
"எங்கள் பரம்பரை, கருத்துக்களை அனாதைகளாக விடக்கூடிய பரம்பரை அல்ல.! "என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா . Dravidian voice தளத்தில் தந்தை பெரியார் , பேரறிஞர் அண்ணா , தலைவர் கலைஞர் , தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் எழுத்துகளை பேச்சுக்களை குரல் வடிவில் பதிவு செய்து வருகிறோம் . நாங்கள் எங்கள் கட்டை விரலை வெட்டி போடுகிற வரையில் எழுதிக்கொண்டே தான் இருப்போம் .நாக்கின் நுனியை நறுக்கிப் போடுகிற வரை பேசிக் கொண்டேயிருப்போம். கட்டை விரலையும் நாக்கையும் வெட்டிப் போட்டாலும், வாயைவிட கண் அழகாகப் பேசுமே! பேசாமலா போகும்?? என்று நம் பேரறிஞர் அண்ணா சொன்னது போல தொடர்ந்து நம் கருத்துகளை பரப்புவோம். திராவிட இயக்க பரம்பரையின் கொள்கைகளை பார் எங்கும் பரப்புவோம்.
Listen to our shows

தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சி முழக்கம்
byDravidian Voice
20/04/1983 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மாநில சுயாட்சி கோரிக்கை நாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞரின் உரை .
நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டவர்கள்
மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் .
மறைந்த முன்னாள் அமைப்பு செயலாளர் N.V.N சோமு அவர்கள்.
திமுக பொருளாளர் ( அன்றைய சென்னை மாவட்ட செயலாளர்) முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு டி.ஆர் பாலு அவர்கள்.
முன்னாள் அமைச்சர் திரு ஆற்காடு வீராசாமி அவர்கள்.
Don’t miss it .

Search Results placeholder