Dravidian Voice – பிம்பச் சிறை நூல் விமர்சனம் Episode 156
பிம்பச் சிறை எம். ஜி. ராமச்சந்திரன் – திரையிலும் அரசியலிலும் என்பது எம். எஸ். எஸ். பாண்டியன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1992 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட The image Trap:M.G.Ramchandran in Films and political என்ற நூலின் தமிழாக்கம் ஆகும். இந்நூலை பூ. கொ. சரவணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்தப் புத்தகம் எம்.ஜி.ஆரின் பிம்ப அரசியலைப் பற்றிய ஆய்வாகவும், எப்படி திட்டமிட்ட முறையில் மக்களிடம் வலிந்து பிம்ப அரசியல் திணிக்கப்பட்டது என்பதையும் மிக விரிவாக அலசி ஆராய்கின்றது.
மேலும் இந்த நூலில் எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையையும், திரையில் தனக்கான பிம்பத்தை திட்டமிட்டு மிகத் தெளிவாக கட்டமைத்தார் என்றும், அவர் கட்டமைத்த பிம்பத்தை எப்படி தமிழக மக்கள் மனதளவில் ஏற்றுக்கொண்டு எம்.ஜி.ஆரை தங்களில் ஒருவராக, தங்களை மீட்க வந்த மீட்பாராக கருதினார்கள் என்பதை பாண்டியன் ஆய்ந்துள்ளார்.